Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான சாப்ட்வேர் களில் ஒன்று “மைக்ரோசாப்ட் எக்ஸல்”. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சாப்ட்வேர் களில் அதிகம்பேரால் பயன்படுத்தக்கூடிய பல பயன்பாடுகளை கொண்டது மைக்ரோசாப்ட் எக்ஸல். கணினி பயன்படுத்தும் சாதாரண பயனாளர் இருந்து மிகப்பெரிய தொழில்நுட்ப கம்பெனிகள் வரையிலும் எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது.
எக்ஸல் உதவியுடன் இரண்டு எண்களை கூட்டுவது முதல் மிக கடினமான கணக்குகள் வரை செய்யமுடியும். அதோடு பிற கணினியில் இருக்க கூடிய பிற சாப்ட்வேர் களுடன் இணைந்து செயலாற்றக்கூடிய திறன் எக்ஸல் சாப்ட்வேர் க்கு உண்டு. 1987 இல் ஆரம்பித்து இதுவரை தொடர்ச்சியாக பல வெர்சன்களை (versions) கொண்டுவந்துள்ளது.
நீங்கள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணிபுரிபவராக இருந்தால் உங்களுடைய அன்றாட அலுவலக தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிறந்த தேர்வாக இந்த பாடநெறி கைக்கொடுக்கும்.
இந்த கற்கைநெறியில் 40 அத்தியாயங்களும் 06 செயன்முறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் கற்கைநெறியினை 80% சதவிகித சித்தியுடன் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கான சான்றிதழும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
5 Courses