Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான சாப்ட்வேர் களில் ஒன்று “மைக்ரோசாப்ட் வேட்”. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சாப்ட்வேர் களில் அதிகம்பேரால் பயன்படுத்தக்கூடிய பல பயன்பாடுகளை கொண்டது. கணினி பயன்படுத்தும் சாதாரண பயனாளர் இருந்து மிகப்பெரிய தொழில்நுட்ப கம்பெனிகள் வரையிலும் வேட் பயன்படுத்தப்படுகிறது.
வேட் உதவியுடன் நீங்கள் பல வகையான ஆவணங்களை உருவாக்கவும், அவற்றை மாற்றிக் கொள்ளல், சேமித்துக்கொள்ளல், மின்னஞ்சல் மூலம் பிறருக்கு அனுப்புதல், தபால் அட்டைகள், மேலும் படங்களை உள்ளடக்கிய அறிக்கைகள், கடிதங்கள் போன்ற பல நாளாந்தம் நாம் மேற்கொள்ளும் அல்லது உருவாக்கும் எமது வேலைகளை மிகவும் இலகுவாகவும் நேர்த்தியுடனும் செய்துக்கொள்ள பலராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு மென்பொருளாக வேர்ட் பயன்படுகிறது. 1987 இல் ஆரம்பித்து இதுவரை தொடர்ச்சியாக பல வெர்சன்களை (versions) கொண்டுவந்துள்ளது.
நீங்கள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணிபுரிபவராக இருந்தால் உங்களுடைய அன்றாட அலுவலக தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிறந்த தேர்வாக இந்த பாடநெறி கைக்கொடுக்கும்.
இந்த கற்கைநெறியில் 27 அத்தியாயங்களும் மேலும் பல அன்றாட தேவைக்குகந்த செயன்முறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் கற்கைநெறியினை 80% சதவிகித சித்தியுடன் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கான சான்றிதழும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த கற்கை நெறியினை நீங்கள் நிறைவு செய்யும் போது, நிச்சயமாக கீழ்வரும் தலைப்புகளில் பயிற்றுவிக்கப்படும் விடயங்களை தேர்ச்சியுடன் பயன்படுத்தக்கூடிய ஒரு மைக்ரோசொப்ட் வேர்ட் பயனாளராக நீங்கள் உங்களை உணர்வீர்கள்.
5 Courses