


உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக பயிற்சி அமர்வுகள்.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக 24 பிரதான பாடங்களுக்கும் மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் பல்கலைக்கழக கட்டமைப்பினூடாக பயிற்சி அமர்வுகளை நடாத்துவதுடன், கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் நிலவிய கொரோனா நிலைமை மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக முறையாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுபோன மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். அதன்படி, தயாரிக்கப்படும் அடிப்படை பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்…

2023 ஆம் ஆண்டிற்காக பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பத் திகதியை மீள நீடித்தல்.
2023 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை நீடித்து தருமாறு பெற்றோரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, மேற்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதிதி 2022.08.15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இன்று ( 23) பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம், பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ்களுக்கு தேவையான…

ஜூலை 25 முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஜூலை 25 ஆம் திகதி முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது, மாணவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலை சென்று கல்வி பயிலவும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் கற்றல் முறைகளை கடைப்பிடிக்கவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அதிபர்கள், மேலதிகமாக மாகாண கல்வி செயலாளர்கள், மாகாணக் கல்வி பணிப்பாளர்கள்,…

2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பு
மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் நடாத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து 2022 ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடாத்துவது பற்றிய தகவல் 2022 ஜூன் 25 ஆம் திகதி கல்வி அமைச்சினால் ஊடக அறிவிப்பினூடாக வெளியிடப்பட்டது. அவ்வாறு இருந்தபோதிலும் அதற்கு பின்னர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு 2022 ஜூன் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வாரத்தினுள் நாட்டில் எரிபொருள் விநியோகத்தினை…